Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான நிலையம்… அகலமான விமானங்கள் செல்ல தடை… விமான போக்குவரத்து இயக்கம் அறிவிப்பு…!!

கோழிக்கோடு விமான நிலையத்தில் அகலமான விமானங்களை இயக்க இந்த பருவமழை காலத்தில்  தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

துபாயிலிருந்து சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அன்று இரவு கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா சிறப்பு விமானம், ஓடு பாதையிலிருந்து தடம் மாறி தாண்டிச் சென்று விபத்துக்குள்ளாகியது. இதில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, கோழிக்கோடு வருவதற்கு அகலமான அமைப்பு கொண்ட மிகப்பெரிய விமானங்களை இந்த பருவமழை காலத்தில் இயக்குவதற்கு மத்திய விமானப் போக்குவரத்து இயக்கம் தடைவிதித்துள்ளது.

வருடம் தோறும் கனமழையால் பாதிக்கப்படும் சென்னை, மும்பை போன்ற நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் சிறப்பு வசதி செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |