கோழிக்கோட்டில் இருந்து சென்ற விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோழிக்கோட்டில் இருந்து இன்று காலை தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள குவைத் நாட்டிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு சென்றது. புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே விமானத்தின் சரக்குப் பெட்டக பகுதியில் தீ பிடிக்கும் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. அதிர்ச்சியடைந்த விமான ஓட்டுனர் விமானத்தை சிறிது நேரத்திலேயே கோழி கோட்டுக்கு திருப்பியுள்ளார்.
விமானம் திருப்பப்பட்ட உடனே கோழிக்கோடு விமான நிலையத்திற்கு அவசரமாக தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்த உடனேயே விமானம் பத்திரமாக தரை இறங்கியது. இதில் 17 பயணிகள் இருந்தனர். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு விமானம் தரை இறங்கியது. இந்தச் சம்பவம் விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கும், விமான நிலையத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.