Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய கார் வாங்கிய KPY சரத்…. இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்ட புகைப்படம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!

KPY சரத் புதிதாக வாங்கிய காருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரபல விஜய் தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தங்களது திறமையால் பிரபலமானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வரிசையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று காமெடி செய்து கலக்கி வந்தவர் KPY சரத். அதன்பிறகு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதை தொடர்ந்து இவர் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தன் மனைவியுடன் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் புதிதாக வாங்கிய காருடன் புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்களும், ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |