Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்… கிரையான்ஸ் பென்சிலை தின்ற சிறுமி… மகளை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் மெழுகு கலர் பென்சிலை தின்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர்  மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி என்பவர். இவருக்கு பிரியங்கா எனும் 8 வயது குழந்தை உள்ளது. அவள் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள் . அவள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது மெழுகு கலர் (க்ரையன்ஸ்)  பென்சிலை தின்றதால் மயங்கி விழுந்துள்ளார். மயங்கிக் கிடந்த மகளை பார்த்த பெற்றோர்கள் பதறி அடித்து அவளைத் தூக்கிக்கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு ஓடிச் சென்றனர்.

அங்கு அவளுக்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் பிரியங்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து அப்பகுதி போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெழுகு கலர் பென்சில் தின்றதால் உயிரிழந்த சிறுமியை எண்ணி அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

Categories

Tech |