Categories
அரசியல் மாநில செய்திகள்

கிராமசபை கூட்டங்களுக்கு தடை… அதிமுக போடும் தடைகளை உடைப்போம்… வைகோ கண்டனம்…!!!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களின்  மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருகிறது. அதனைக் கண்டு பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஊராட்சி சட்டவிதிகளை காரணமாக காட்டி, கிராம சபை கூட்டங்களுக்கு தடை போடும் எடப்பாடி பழனிசாமி அரசு, மத்திய அரசின் நிதி உதவியை சட்டப்படி ஊராட்சிகளுக்கு பெற்றுத்தர வேண்டும். மாநில அரசின் நிதியை கொடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவது நியாயமா? கடந்த அக்டோபர் முதல் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதை தடுப்பதற்காக தடை போடப்பட்டது.

இருப்பினும் தடைகளை உடைத்து வெற்றிகரமாக கிராமசபை கூட்டங்கள் நடந்து வந்தது. மக்களின் பெருந்திரள் பங்கேற்புடன் நடக்கும் கிராமசபை கூட்டங்களை அதிமுக தடை போட முயற்சித்தாள் அத்தடையும் நொறுங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

Categories

Tech |