Categories
தேசிய செய்திகள்

கிரெடிட், ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு…. ஜனவரி 1 முதல் வரவுள்ள மாற்றங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

2022ம் ஆண்டு வர இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி பண பரிவர்த்தனைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த அடிப்படையில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பண பரிவர்த்தனைகள் போது வாடிக்கையாளர்கள் கிரேடிட், டெபிட் கார்டு விவரங்களை பதிவிடுவதில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தும்போது கார்டின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஒன்-கிளிக் பேமெண்ட் போன்று நீங்கள் ஆன்லைனில் ஏதாவது வாங்க முயற்சி செய்தால், முன்கூட்டியே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விவரத்தை அதுவே பதிவிடும்.

இந்த நடைமுறையில்தான் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் கார்டு பற்றிய விவரங்களை ஆன்லைன் பண பரிவர்த்தனைகள்போது பதிவிட வேண்டும். இதனிடையில் வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை 2022-ஆம் ஆண்டு ஜனவரி1-ம் தேதியிலிருந்து சேமித்து வைக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. அதற்கு பதில் பண பரிவர்த்தனைகளை மிக பாதுகாப்பானதாக மற்றும் தற்போது டோக்கனைசேஷன் என்ற ஒரு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. கார்டு விவரம் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும்.

மேலும் கார்டு எண், CVV உள்ளிட்ட எந்த விவரமும் 3-ம் தரப்பு அமைப்பு அல்லது செயலிகளுக்குத் தெரிய வராது. ஆகவே உங்களுடைய கார்டுக்கு பதிலாக உங்கள் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் டோக்கன் எண்ணை உள்ளிட்டால் போதும். இது ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் 2020 மாதம் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது அது நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில் அந்த முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-ம் முதல் ஏடிஎம் இயந்திங்களில் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

Categories

Tech |