தென்காசியில் பொதுமக்களுக்கு போலீசார் கொரோனா தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில காட்டுபாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா வைரசை தடுப்பதை குறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றை தடுக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினார்கள். மேலும் முக கவசம் அணிவதின் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றி, வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளனர்.