நடந்து சென்ற பெண் மீது கிரேன் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜே.ஜே நகர் பகுதியில் நாகம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாலைமேடு அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் நாகம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.