Categories
சினிமா தமிழ் சினிமா

“கிருஷ்ண ஜெயந்தியில் கிடைத்த பரிசு”….. குழந்தைகளுக்கு பெயர் வைத்த நடிகை நமீதா….. என்னனு நீங்களே பாருங்க……!!!!!!

தமிழ் சினிமாவில் கடந்து 2002-ம் ஆண்டு அறிமுகமான நமிதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகை நமிதாவுக்கு பட வாய்ப்புகள் குறையவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நடிகை நமீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில் நடிகை நமிதா தன்னுடைய சொந்த ஊரான சூரத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளார். இவர் தன்னுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்று பெயர்கள் வைத்துள்ளார். மேலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் தனக்கு கொடுத்த பரிசு என்பதால் கிருஷ்ணரின் பெயரை தன்னுடைய குழந்தைகளை வைத்துள்ளதாக நமீதா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

 

 

Categories

Tech |