Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்புடி பண்ணிட்டியே கிருஷ்ணா… விலை உயர்வால் கதறும் மக்கள்..!!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கோயம்பேடு சந்தையில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் பழங்கள் வாங்கி வருவதாகவும், இதனால் வியாபாரம் அமோகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இன்று கிருஷ்ண ஜெயந்திக்கு படைக்கப்படும் பேரிக்காய், நாவல்பழம் உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ரூ180க்கு விற்பனையாகும் ஆப்பிள் 120 ரூபாய்க்கும், ரூ100க்கு விற்பனையான ஆரஞ்சு பழம் 150 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனையான கருப்புதிராட்சை 100 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

Categories

Tech |