Categories
அரசியல்

அய்யய்யோ….! ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்படலாமா….? என்னப்பா இப்படி சொல்லுறீங்க…. பதறும் கிருஷ்ணசாமி….!!!!

பல்கலைக்கழக, துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதில் தமிழக அரசு, ஆளுநரின் உரிமையை பறிக்க வேண்டாம் என்று கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு தேர்ந்தெடுப்பது குறித்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த தீர்மானத்தை புதிய தமிழ்நாட்டின் கட்சி தலைவரான கிருஷ்ணசாமி எதிர்த்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதலமைச்சர், துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதில் மாநில அரசு பங்கு வகிக்க வேண்டும் என்றும், அது சட்ட வல்லுனர்களுடன் சேர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தீர்மானிக்கப்படும்” என்றும் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் 50 வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்களின் உறவினர்கள் அல்லது அவர்களின் ஜாதி, மதத்தை சேர்ந்தவர்களுக்கு தான் துணைவேந்தர்கள் பதவி கிடைத்தது.

ஆராய்ச்சிகளின் இருப்பிடமாக திகழ வேண்டிய பல்கலைக்கழக உறுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிறுவனமாக மாறிவிட்டது. பேராசிரியர்கள் பலர், பாலியல் புகார்களில் மாட்டினார்கள். துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தி.மு.க ஆட்சி தங்கள் வசப்படுத்தும் பட்சத்தில், கிராமப்புறங்களில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்.

‘மாநில சுயாட்சி’ என்னும் பெயரில் துணைவேந்தர்கள் தேர்ந்தெடுப்பதில் ஆளுநர்களின் அதிகாரங்களை பறித்து, பல்கலைக்கழகங்களையும் கட்சி குடும்பச் சொத்தாக மாற்றுவதற்கு முயல வேண்டாம். அது, தி.மு.க அரசை, ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கும் பணிகளுக்கு  தொடக்கமாக அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது. தவறான பாதையை தேர்வு செய்யாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |