தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1, 128 பேர் குணமடைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதித்து நேற்று வரைக்கும் 1101 ஆக இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு 1, 128 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரைக்கும் பாதிக்கப்படாத மாவட்டங்களில் பட்டியலில் கிருஷ்ணகிரி இருக்கின்றது. அதே போல கொரோனா பாதிப்பில் மறுபடியும் ஆரஞ்சு பகுதிக்கு மாறிய மாவட்டங்கள் வரிசையில் நீலகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
இதனை தவிர்த்து மற்ற மாவட்டங்கள் அனைத்தும் சிவப்பு பகுதியில் தான் இருக்குது. அதில் அதிகபட்சமாக பார்த்தோமானால் சென்னையில் 673 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 570ஆக இருந்த எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 103 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 673 ஆக உயர்ந்திருக்கிறது.