ஒகேனக்கல் அருகில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்துள்ள ஜருகு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி.இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.ஈரோட்டில் இருந்து உறவுக்கார பெண் ஒருவர் பள்ளி விடுமுறையைகாக இவரது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று ஒகேனக்கலை சுற்றிப் பார்க்க இருவரும் சென்றுள்ளனர். ஒகேனக்கல் அடுத்த பண்ணப்பட்டி சாலையில் இருவரும் பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் முனுசாமியை சுட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் ஓடியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இக்கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரித்து வருகின்றனர்.