கிருஷ்ணஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது விரதம் இருப்பது எப்படி என்பது பற்றிய தொகுப்பு.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது கோகுல அஷ்டமியாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி தமிழகத்திலும், வட இந்தியாவில் 12ம் தேதியும் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. ஆடி 27 ஆம் தேதி காலையில் 7:55 மணிக்கு அஷ்டமி திதியில் தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 9:36 மணி வரை உள்ளது.
கிருஷ்ணர் அவதரித்ததாக அஷ்டமி திதி தொடங்கும் ஆகஸ்ட் 11ஆம் தேதி தமிழகத்தில் கடைபிடிக்கப்படும்.அதே அதேசமயம் கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வட இந்தியர்கள் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் இரவில் பூஜைகள் செய்வது வழக்கம். அஷ்டமி திதி ஆகஸ்ட் 11ஆம் தேதி 7:55 மணிக்கு தொடங்குவதால் அதன்பின்பு எமகண்டம், ராகு காலம், குளிகை, ஆகியவற்றை தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் அபிஷேகம் பூஜை புனஸ்காரங்களை செய்ய உகந்த நேரமாக கூறப்படுகிறது.
கிருஷ்ண வழிபாட்டிற்கு வைக்கவேண்டிய உணவு பொருட்கள்:
- கிருஷ்ணருக்கு வெண்ணெய். இனிப்பு பலகாரங்கள் தான் அதிகமாக பிடிக்கும். அதனால் நம்மால் முடிந்த அளவு இனிப்புகளை செய்து வழிபடுவதோடு வெண்ணை பூஜையில் இடம் பெறுவது முக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
- அதேபோல் குசேலனின் அன்பை அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார். அதனால் எந்த ஒரு பலகாரங்களையும் செய்ய முடியாத நிலை இருந்தால் கவலைப்படாமல் பூஜையில் அவல் மற்றும் வெண்ணெய் வைத்தாலே கிருஷ்ணரின் அருளைப் பெறலாம்.
- அன்றைய தினத்தில் கிருஷ்ணரை நினைத்து உண்ணாமல் விரதம் இருந்து, அவரது நாமங்களை சொல்வதும் கிருஷ்ணரை குறித்த பாடல்களை பாடி வழிபட்டு வந்தால் கிருஷ்ணரின் முழு அருளையும் பெறலாம்.