லண்டனில் கிறிஸ்துமஸுக்கு முன் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியா தலைநகர் லண்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து லண்டன் பெருநகர காவல்துறை ஆணையர் Cressida Disk கூறியபோது “கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் தீவிரவாத தாக்குதல் நடத்த சாத்தியமான அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே சந்தேகத்திற்கு இடமான நடத்தையை புகார் அளிக்க பொதுமக்கள் தைரியத்தையும், நம்பிக்கையையும் காட்டுவது மிக முக்கியமாகும்.
மேலும் காவல்துறையை தொடர்புகொள்வது மக்களின் உயிர்களை காப்பாற்றும் என்று கூறினார். அதுமட்டுமின்றி சமீபத்தில் எசெக்ஸில் சர் டேவிட் அமெஸ் எம்.பி.யின் கொடூரமான கொலையின் மூலமாக மற்றொரு பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டோம். இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் மிகவும் உண்மையானது என்பதை நினைவுப்படுத்துகிறது. எனவே லண்டன் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். ஆகவே பொதுமக்கள் சந்தேகத்திற்கு இடமாக எதையும் பார்த்தால் அல்லது கேட்டால் அதுகுறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்குமாறு” அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.