Categories
மாநில செய்திகள்

“இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய்”… அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக் கூடாது- கே.எஸ் அழகிரி ஆதரவு..!!

அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 

ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை , மதுரை ஆகிய இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாக தகவல் வெளியாகியுள்ளது.

Image

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில் , கணக்கில் காட்டாத 300 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தொடந்து 18 மணி நேரத்துக்கு மேலாக விஜய் வீட்டில் நடைபெறும் இந்த சோதனையில் விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தற்போது தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இன்று காலை முதலே ட்விட்டரில் #MrPerfectThalapathyVIJAY, #WeStandWithVIJAYanna என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Image

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி காங்கிரஸ் தரப்பில் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் மீது வருமான வரித்துறை தொடுத்திருக்கும் சோதனைகள் மூலம் அவரது உரிமைக் குரலை ஒடுக்கி, அச்சுறுத்தி விடலாம் என மத்திய பா.ஜ.க. அரசு கருதுமேயானால் அது வெறும் பகல் கனவாகத் தான் முடியும்.  இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |