புதுச்சேரியில் கல்லூரி இறுதித் தேர்வை ஒத்திவைக்க கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாநில அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது. கல்லூரிகளை சென்ற மார்ச் மாதம் அரசு உத்தரவால் மூடப்பட்டது. பாதிக்குப் பாதி பாடங்களை மட்டுமே நடத்தியிருக்கிறார்கள், மீதி பாடங்களை நடத்தாத இந்த நிலையில் மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியவில்லை.
அதனால் மாணவர்கள் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகிறோம். புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லை, தங்க விடுதி இல்லை, இந்த நிலையில் எப்படி நாங்கள் சென்று தேர்வு எழுதுவது. இதுகுறித்து பலமுறை ஆட்சியரிடம் மனு கொடுத்தும் அதை ஏற்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் நாங்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனர்.