இந்தியாவில் கே.டி.எம் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களின் விலையில் புதிய மாற்றத்தை செய்துள்ளது.
இந்தியாவின் கே.டி.எம் நிறுவனம் தனது டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மாடல்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது. அதன்படி கே.டி.எம். டியூக் 125 மாடலின் விலை ரூ. 2,248 மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 125 விலை ரூ. 1,537 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்தின் பின் கே.டி.எம். டியூக் 125 மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல்கள் முறையே ரூ. 1.32 லட்சம் மற்றும் ரூ. 1.48 லட்சம் என அந்நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.
மேலும், இந்த இரு மோட்டார் சைக்கிள்களும் 124சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களின் என்ஜின் 14.5 பி.ஹெச்.பி. @9250 ஆர்.பி.எம். மற்றும் 12 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறனை வழங்குகிறது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ்ம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த கே.டி.எம். டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மாடல்களில் பல்வேறு அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் ஸ்டைலிங் பாகங்களும், மேம்பட்ட கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இரு மாடல்களிலும் முன்புறம் 43 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரேக்கிங்கிற்கு முன்புறம் மற்றும் பின்புறங்களில் 300 எம்.எம். மற்றும் 230 எம்.எம். டிஸ்க் பிரேக்குகளும், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.