பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ். 6ஆம் 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் பயின்று வந்தனர் .ஒன்பதாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தாமதமானதால் 9,10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட திட்டம் 40% குறைக்கப்பட்டது.
தற்போது ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை விரைவில் திறக்கவும், நேரடி வகுப்புகளை நடத்தவும் பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.