கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகளில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தியானது நடைபெற்று வருகிறது. பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தியானது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். இதனால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2வது அணு உலையில் ஜெனரேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுதால் மின்னுற்பத்தி கடந்த 21ம் தேதி முதல் மின் உற்பத்தியானது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த பழுதை சரி செய்ய ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் தனிவிமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இந்த வல்லுநர்கள் குழுவினர் 21ம் தேதி பராமரிப்பு பணிகளை தொடங்கிய 25ம் தேதி பணிகள் நிறைவடைந்து மீண்டும் மின் உற்பத்தியானது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.