Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சரியாக வழங்கவில்லை…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பல மாதங்களாக குடிநீர் வழங்காத காரணத்தினால் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3-வது வார்டு பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வழங்காததால் நகராட்சி மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வந்துள்ளனர். இந்நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பஜார் கூட்டுரோடு பகுதியில் கே.ஆர் ரபிகான் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் பி.நாகராஜ் மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு சாந்தலிங்கம் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அப்பகுதி மக்கள் தங்களுக்கு உடனடியாக கால்வாய் தூர்வாருதல், குடிநீர் வழங்குதல் மற்றும் வீடு கடைகள் மீது கருங்கல் பலகை போட்டு கால்வாய் மூடி உள்ளதால் மழைக்காலங்களில் நீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் அதை சரி செய்து தருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து நகராட்சி ஆணையர் நாகராஜ் கூறும் போது, 10 பேர் கொண்ட குழு அமைத்து உடனடியாக அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் எனவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |