Categories
மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை மேட்டுத்தெரு வார்டுஎண் 2 மற்றும் 19 ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை ராணிப்பேட்டை-தெங்கால் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ஆகியோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது குடிநீர் வினியோகம் செய்வதற்காக நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் நகர சபை உறுப்பினர் மணிமேகலை உள்பட 30 பேர் மீது இராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |