மேல்நிலை குடிநீர் தொட்டியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி நஞ்சை கொளாநல்லி ஊராட்சி மன்ற சேவை மைய கட்டிடம் அருகில் மேல்நிலை குடிநீர் தொட்டி இருக்கிறது. இந்த குடிநீர் தொட்டியின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதமடைந்து இருக்கிறது. ஆகவே இதனை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.