Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் பெற்ற தாயை கொலை செய்த மகன் கைது…!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பணம் கேட்டு குடிபோதையில் பெற்ற தாயை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த மகனை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கொலை செய்யப்பட்ட பாண்டியம்மா வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர். இவரது கணவர் இறந்த நிலையில் தன் மகன்களான மணிகண்டன், பிரகாஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இரண்டாவது மகன் பிரகாஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தாய் பாண்டிஅம்மாளிடம்  அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக  கூறப்படுகிறது.

இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரகாஷ், பாண்டிஅம்மாளிடம் தான் வாங்கிய 4 லட்சம் ரூபாய் கடனை அடைக்க வீட்டை விற்று பணம் தரும்படி கேட்டதாக தெரிகிறது. இதற்கு பாண்டியம்மாள் மறுக்கவே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட பிரகாஷ் உருட்டுக்கட்டையால் தாய் பாண்டியம்மாலை சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த பாண்டியம்மாள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம்  குறித்து பாண்டியம்மாளின் மூத்த மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் பிரகாஷ்சை வாடிப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |