Categories
அரசியல் தேசிய செய்திகள்

4-வது முறையாக அபார வெற்றி….. இந்த காலத்துல இப்படி ஒருத்தரா…? குடிசை வீட்டு MLA-வுக்கு குவியும் பாராட்டு….!!

இந்திய அரசியலை பொருத்தவரையில் தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் வைத்து மட்டுமே அரசியல் நடத்தும் கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மக்களின் ஆதரவு பெரும்பான்மை அக்கட்சிகளுக்கு இருப்பதில்லை. இந்த சூழல் கடந்த சில ஆண்டுகளாக மட்டும்தான் நடை பெற்று வருகின்றனர். அதற்கு முன்பு வரை தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் வைத்து மட்டுமே அரசியல் நகர்வுகள் நடைபெற்ற காலங்கள் உண்டு.

உதாரணத்திற்கு கேரள மாநிலத்தை கூறலாம். ஆனால் தற்போது அந்த காலங்கள் அனைத்தும் மாறி, பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், வெற்றி பெறலாம் என்ற நிலை பெரும்பாலான இடங்களில் உருவாக்கி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் பணத்தை விடவும் வலுவான ஒன்று இந்த சமூகத்தில் உள்ளது என்பதை மெய்ப்பிக்கும் விதமாக,

குடிசை வீட்டில் வசிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பீகார் மாநிலம் பல்ராம்பூர் தொகுதியில் நான்காவது முறையாக 53 ஆயிரத்து 597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். தற்போது நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த போதிலும், பொருள் ஏதும் சேர்க்காமல் மிக எளிமையாக அவர் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |