நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குடிசை வீடுகள் கட்டி இருந்ததை அதிகாரிகள் இடித்து அகற்றி உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகம் பின்புறத்தில் இரண்டு குடிசை வீடுகள் கட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் என நகராட்சி ஆணையாளர் ஜெயராம்ராஜாவுக்கு புகார்கள் வந்துள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியை நகரமைப்பு அலுவலர் அளந்து பார்த்த போது சுமார் 4000 சதுர அடி ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடுகள் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் வீடுகளுக்கு முன்பு இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நகராட்சிக்கு வரி செலுத்தி உள்ளனர்.
பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பலமுறை நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் உத்தரவின்பேரில் நகரமைப்பு அலுவலர் கௌசல்யா, துப்புரவு ஆய்வாளர் விவேக் மற்றும் துப்புரவு அலுவலர் இளங்கோ ஆகியோர் நேரில் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்றியுள்ளனர்.