Categories
மதுரை மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நீதான நடவடிக்கைக்கு தடை..!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிகளின் நிர்வாகத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசை நிறுத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் இந்த நோட்டீசுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் பதிலை தொகுத்து ஒருங்கிணைந்து அறிக்கை ஒன்றை தயாரித்து அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அதுவரை கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பி உள்ள நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |