Categories
உலக செய்திகள்

“குடியரசு கட்சி மீண்டும் அரியணை ஏறும்”… டொனால்ட் ட்ரம்ப் அதிரடி பேச்சு…!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் என்னுடைய அரசியல் வாழ்க்கை இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டார். பிறகு எந்த நிகழ்ச்சியும் கலந்துகொள்ளாத டொனால்ட் ட்ரம்ப்  தற்போது ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் “என்னுடைய அரசியல் இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை “என்று கூறினார். மேலும் டொனால்ட் ட்ரம்ப்யின் சூளுரைப்படி அடுத்து வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு கட்சி அரியணை ஏறும் என்று தெரிவித்தார்.

அதன் பிறகு “உங்களின் ஆதரவுடன் மீண்டும் குடியரசு கட்சி ஆட்சி அமைக்கும்”என்றார் . மூன்றாவது முறையாக கூட நானே அவர்களை வீழ்த்தலாம் யாருக்குத் தெரியும்? அந்த ஆட்சியில் மீண்டும் நானே  அதிபர் ஆகலாம் என்று தெரிவித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றதாகவும் சூழ்ச்சியின் மூலம் ஆட்சி அமைவதை தடுத்ததாகவும் தெரிவித்தார். எனக்கு “புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை “நாம் குடியரசு கட்சியை ஒன்றிணைந்து கட்டமைப்போம் என்று  உறுதியாககூறினார்.

Categories

Tech |