நமது நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுகிறோம். சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபடுகிறது. இதில் அணிவகுப்புகளின் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதன் பிறகு தமிழக முதலமைச்சர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது முதலியனவற்றை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இன்று வழங்கிய குடியரசு தின விருதுகள்:
வீரதீர செயல்களுக்கான அண்ணா விருது – தீயணைப்பு படை ஓட்டுநர் ராஜாவுக்கு வழங்கினார்.
கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது – மு. சாஜ் முகமதுக்கு கொடுக்கப்பட்டது.
காந்தியடிகர் காவலர் பதக்கம் – திருப்பூர் காவல் ஆய்வாளர் சந்திரமோகன்க்கு அளிக்கப்பட்டது.
விருது வழங்குவதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சி என கோலாகலமாக கொண்டப்பட்டது.