Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டெருமை…. அடித்து பிடித்து ஓடிய பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பிளாக் பிரிட்ஜ் பகுதியிலுள்ள வனப்பகுதியில் காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இவைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகிலுள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிகின்றன. மேலும் அங்கு வசிக்கும் காட்டெருமைகள் ஜெயந்தி நகர், அன்னை நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் ஒரு காட்டெருமை அவாஹில் ராணுவ முகாம் பகுதியிலிருந்து நல்லப்பன் தெரு சாலையில் உலா வந்தது.

அந்த வழியாக பொதுமக்கள் தங்கள் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காட்டெருமை சாலையில் வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த காட்டெருமை தேயிலை தோட்டம் வழியாக பிளாக் பிரிட்ஜ் பகுதிக்கு சென்றது. மேலும் காட்டெருமை காலை நேரத்தில் சாலையில் உலா வந்ததால் பொதுமக்களின் வேலை பாதிக்கப்பட்டது.

Categories

Tech |