Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துட்டு…. பெண்கள் நாற்று நட்டு போராட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

சாக்கடை கழிவு நீரை அகற்ற கோரி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் சாக்கடை நீர் செல்வதற்காக வடிகால் வசதி கட்டப்பட்டுள்ளது .ஆனால் சாக்கடை கழிவு நீர் வெளியே செல்லமால் அப்படியே தேங்கி நின்றது. கடந்த சில நாட்களாக அந்தியூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழை நீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீர் வெளியே செல்வதால் சாலையில் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதியில் அதிகமாக மழை பெய்யும்போது சாக்கடை கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு பர்கூர் சாலையில் தேங்கி நின்ற சாக்கடை கழிவு நீரில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்கள் கூறியதாவது “எங்கள் பகுதியில் சாக்கடை கழிவு நீர் புகுந்து விடுவதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். மேலும் எங்கள் பகுதியில் சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே சாலையில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று கெட்டிசமுத்திரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |