Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் தகவல்” குடியிருப்பு பகுதியில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

கேட்பாரற்று கிடந்த முதியவரின் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் முதியவர் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் சுற்றித் திரிந்து பொதுமக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு வந்தது தெரியவந்துள்ளது.

ஆனால் அவர் யார் என்பது பற்றி விவரம் இதுவரை தெரியவில்லை. இதனை அடுத்து காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடியிருப்பு பகுதிகளில் கிடந்த முதியவர் யார், எந்த ஊரில் வசிப்பவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |