Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்புகளுக்குள் புகுந்த சிறுத்தை… அச்சத்தில் பொது மக்கள்….!!

உதகமண்டலத்தில் குடியிருப்புகளுக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளிலிருந்து சிறுத்தை, புலி ,காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உதகமண்டலத்தில் மையப்பகுதியான கமர்சியல் சாலை பகுதியில் கடந்த சில நாட்களாக  நாய்கள் தொடர்ந்து  காணாமல் போயுள்ளது. காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு  கேமராவில்  பார்த்தபோது சிறுத்தைப்புலி ஒன்று நள்ளிரவில் குடியிருப்புகளுக்குள்  புகுந்து உதகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

இதைப்பார்த்த காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுத்தைப்புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையில் கடந்த  சில மாதங்களுக்கு முன்பு  ஆளுநர் மாளிகைக்குள் சிறுத்தைப்புலி நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது குடியிருப்புகளுக்குள்  உலா வருவது அப்பகுதி  மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |