Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றிய தீ…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாப்பட்டணம் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார் என்ற மகன் உள்ளார். இவர் கார் சர்வீஸ் நிலையம் வைத்து நடத்தி வருகிறார். அதனால் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு குடோனில் கார் சம்பந்தப்பட்ட பொருள்கள், டீசல், பெட்ரோல், ஆயில் போன்றவற்றை அங்கு வைத்திருந்தார். இந்நிலையில்  திடீரென எதிர்பாராதவிதமாக குடோனில் தீப்பிடித்து எரிந்தது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சசிகுமார் மற்றும் அருகில் உள்ளவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் குடோன் கொழுந்துவிட்டு எரிந்ததால் சேலம் தீயணைப்பு துறையினருக்கு சசிகுமார் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் குடோனில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். மேலும் குடோன் தீப்பிடித்து எரிந்ததால் அங்கிருந்த 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

Categories

Tech |