Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடோனில் இருந்து வெளியேறிய கரும்புகை…. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேடர்பாளையம் பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வேஸ்ட் குடோன் வைத்து நடத்தி வருகிறார். அங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இரவு குடோனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சற்று நேரத்தில் குடோன் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து உரிமையாளர் திருமூர்த்திக்கும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து நாசமானது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |