Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனையால் …. தந்தையை தாக்கிய மகன் …. போலீஸ் அதிரடி நடவடிக்கை ….!!!

நாகையில் குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை தாக்கிய மகனை காவல்துறையினர்  கைது செய்தனர் .

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட  கொள்ளுத்தீவு கிராமத்தை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் மகேந்திரன் .இவர் விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானால் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை வீரப்பனுக்கும், மகன்  மகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகன் மகேந்திரன் தந்தையை  மரச் சட்டத்தால் தாக்கினார் .

இதில் படுகாயமடைந்த வீரப்பன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதன்  பின்னர் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார் .இந்நிலையில் பாதிக்கப்பட்ட வீரப்பன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மகன் மகேந்திரனை கைது செய்துள்ளனர்

Categories

Tech |