குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தேப்பெருமாள்நல்லூர் அனிதா நகரில் பாலாஜி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சாந்தினி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் முடிந்த நிலையில் இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை இருக்கிறார். எனவே பாலாஜி ராஜா வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற நிலையில் கணவர் வீட்டிலேயே சாந்தினி தனது கைக்குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த சாந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாந்தனியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் சாந்தினிக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.