Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“என்கூட குடும்பம் நடத்த வா”…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் சரமாறியாக வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள குலவிளக்கு கிராமம் சின்னச்சாமிபுரம் பகுதியில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பந்தல் போடும் தொழிலாளி ஆவார். இவருக்கு பெருமாயி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு மலர்கொடி என்ற மகளும், பிரதாப் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் வரதன் மற்றும் பெருமாயி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெருமாயி கடந்த 8 மாதங்களுக்கு முன் தனது தாய் வீடான கருக்கம்பாளையத்திற்கு சென்றுவிட்டார்.

இதனையடுத்து வரதன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கருக்கம்பாளையம் சென்று தனது மனைவியுடன் சமாதானம் பேசி அவரை சின்னச்சாமிபுரத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலர்க்கொடி பிறந்த நாளை முன்னிட்டு வீட்டில் இறைச்சி சமைத்து அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது வரதனுக்கும், பெருமாயிக்கும் இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த வரதன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பெருமாயியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் பெருமாயி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதன்பின் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வருவதை பார்த்து வரதன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனைதொடர்ந்து பெருமாயியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வரதனை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Categories

Tech |