Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபரின் விபரீத முடிவு…. தர்மபுரியில் சோகம்….!!

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள சொட்டாண்டஅள்ளி பகுதியில் சின்னசாமியின் மகன் மாரியப்பன் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும்-மகளும் இருக்கின்றனர். இதில் மாரியப்பன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மாரியப்பன் அவருக்கு சொந்தமான தார்சு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |