விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள சேந்தனாங்குடி கீழமணலி மாரியம்மன் கோவில் தெருவில் விவசாயி பொன்னுசாமி வசித்து வந்தார். இவருக்கும் இவரது உறவினர் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பொன்னுசாமி மன வேதனையில் இருந்தார். இந்நிலையில் பொன்னுசாமி திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் பொன்னுசாமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.