Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சிபிராஜ்… வெளியான புகைப்படங்கள்…!!!

நடிகர் சிபிராஜ்‌ குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் சிபிராஜ். இவர் ஸ்டூடண்ட் நம்பர் 1, ஜோர் ,வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் ,லீ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் நடிப்பில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை , ஜாக்சன் துரை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து வெளியான ஒரு சில திரைப்படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை . தற்போது இவர்  கபடதாரி ,ரேஞ்சர், மாயோன், ரங்கா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் .

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர் . அந்த வகையில் நடிகர் சிபிராஜ் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மனைவி ரேவதி மற்றும் இரு மகன்களுடன் சிபிராஜ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |