நடிகர் ஜெயம்ரவி குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
புத்தாண்டு தினத்தில் அனைத்து பிரபலங்களும் தாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர் . இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி புத்தாண்டை தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டையுள்ளார்.
தற்போது ஜெயம் ரவி அவரது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது . அதில் நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது. மேலும் ஆர்த்தி அவரது அம்மா, அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு ‘இந்த வாழ்க்கை மிகவும் அழகானது’ என பதிவிட்டுள்ளார்.