Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சரியான பதில் கிடைக்கல…. குடும்பத்துடன் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

நிலத்தின் புல எண்ணை திருத்தம் செய்து தரக்கோரி விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கீழ மருதூர் கிராமத்தில் மாதவன் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் மேல பனையூர் கிராமத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு 49 சென்ட் விவசாய நிலப் பகுதியை வாங்கி தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இந்த நிலத்தின் சான்றிதழ் மூலம் கூட்டுறவு வங்கி கடன் பெற்று மானிய விலையில் விவசாய உபகரணங்கள், இடுபொருட்கள் உரங்கள் வாங்கி சாகுபடி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு கிராம நிர்வாக அலுவலரிடம் நிலச்சான்று வாங்கிய போது நிலத்தின் புல எண் தவறாக இருந்துள்ளது.

இதுகுறித்து மன்னார்குடி தாசில்தாருக்கு அனைத்து உண்மை நகலையும் இணைத்து எனது நிலத்தின் புல எண் தவறாக இருக்கிறது என்று கூறி திருத்தம் செய்து தருமாறு மாதவன் மனு அளித்துள்ளார். இதனையடுத்து மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி மற்றும் 29-ம் தேதிகளில் விசாரணைக்கு அழைப்பு ஆணை வந்தது. இந்த இரண்டு நாட்களிலும் மாதவன் நேரில் சென்றபோது அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கேட்டும் யாரும் சரியான பதில் கொடுக்காததால் ஆத்திரமடைந்த மாதவன் அவருடைய மனைவி சாந்தியுடன் கோட்டூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மன்னார்குடி தாசில்தார் தெய்வநாயகி, போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் செங்குட்டுவன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் மாதவன் நிலத்தின் சரியான புல  எண்ணை திருத்தம் செய்து வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த பின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

Categories

Tech |