குடும்ப பிரச்சனை காரணத்தால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சான்றோர் குப்பம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் பானுப்ரியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பானுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.