Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டாயமாக இந்த நிகழ்ச்சியில்தான் பங்கேற்பேன்…. பேட்டியளித்த விஜய் டி.வி புகழ்…. குவியும் பட வாய்ப்புகள்….!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளியின் மூலம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற புகழ் அடுத்தது எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்பது தொடர்பான தகவலை அவரே தெரிவித்துள்ளார்.

தற்போது மிகவும் பிரபலமான புகழ் முதன்முதலாக விஜய் டி.வியில் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமாகியுள்ளார். அதன்பின்பு விஜய் டி.வியில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த புகழுக்கு குக் வித் கோமாளி ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அதாவது புகழ் குக் வித் கோமாளி என்னும் சமையல் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு தமிழ் திரையுலகிலும் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தான் பிக் பாஸ் 5 வில் கலந்து கொள்ள போவதில்லை என்றும், முன்பு நடித்த குக் வித் கோமாளியின் சீசன் 3 இல் பங்கேற்க போவதாகவும் புகழ் பேட்டியின் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |