கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷா முபின் என்ற ISIS ஆதரவாளர் உயிரிழந்தார். இதனையடுத்து நவம்பர் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முகமது ஷாரித் ISIS ஆதரவாளர் ஆவார். இதனால் ஜமீஷா மூபினுக்கும் முகமது ஷாத்ரிக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? இருவரும் கோவையில் சந்தித்துள்ளார்களா? தொலைபேசி மூலமாக பேசி உள்ளாரா? என்று பல்வேறு கோணத்தில் கோவை போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் உதகை மாவட்டம் போலீசாரும் கைகோர்த்து விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த கர்நாடக போலீஸ் விரைவில் கோவை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடக்கும் பயங்கரவாத செயல்பாடுகள் தென்னிந்தியாவில் பதற்றுமான சூழலை உருவாக்கி வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனை தொடர்ந்து கர்நாடக மாநிலம் மங்களூரில் ஓடும் ஆட்டோவில் கடந்த 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று குக்கர் குண்டு வெடித்தது. அதில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என்று கர்நாடகா போலீசார் உறுதி செய்துள்ளனர். ஆட்டோவில் பயணம் செய்த முகமது ஷாரித் என்பவரின் மொபைல் எண்ணை வைத்து போலீசார் விசாரணை தொடங்கினார்.
முகமது 2020 ஆம் ஆண்டு சட்டம் விடுதலை செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். முகமது ஷாரித்ஸ மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக முகமது யாசின், முஜ் முனீர் ஆகிய இருவரை கர்நாடகா போலீசார்கைது செய்தனர். இந்த வழக்கில் முகமது ஷாரித் தேடப்படும் குற்றவாளி ஆனார். இதற்கிடையில் ஜாமினில் வந்திருந்த அவர் திடீரென தலைமுறைவானார். அப்போது தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் உதகையை சேர்ந்த சுரேந்திரன் என்பவரை சந்தித்ததாக கூறப்படுகிறது. எப்படி தொடர்பு வைப்பது என்பது குறித்து விசாரி தீவிரமடைந்தது. சுரேந்தரின் ஆதார் கார்டை பயன்படுத்தி மொபைல் சிம் கார்டு வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது உடனே சுரைந்திருந்து உதகை புரிதல் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணையால் தமிழக எல்லைப் பகுதிகள், கோவை, நிலக்கரி மாவட்டத்தில் எல்லைப் பகுதிகள், நகரப் பகுதிகள் ஆகியவற்றில் வாகன சோதனை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.