Categories
மாநில செய்திகள் வானிலை

”குளச்சல் – தனுஷ்கோடி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும்”

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழையும் கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும்.

15 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்றும், அப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கூறிவருகிறது. குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் ஒட்டி இருக்கும் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |