குழம்புமிளகாய் தூள்
தேவையான பொருட்கள்:
மிளகாய் வற்றல் – 1 கிலோ
தனியா – 1 கிலோ
துவரம்பருப்பு- 150 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
மஞ்சள் – 6 துண்டுகள்
மிளகு – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
கடுகு – 25 கிராம்
வறுத்த அரிசி – 1/2 கப்
செய்முறை :
முதலில் மிளகாய் மற்றும் தனியா இரண்டையும் நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் துவரம்பருப்பு , கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து வறுக்க வேண்டும் . தனியாக மிளகு , சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும் .பின் வெந்தயம் , கடுகு மற்றும் மஞ்சள் மூன்றையும் சேர்த்து வறுக்கவேண்டும் . பின் இவைகளை ஒன்றாக கலந்து ஆறவிட்டு மிளகாய் , தனியா மற்றும் வறுத்த அரிசி சேர்த்து அரைத்தெடுத்தால் குழம்புமிளகாய் தூள் தயார் !!!