Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கவனக்குறைவாக இருந்த தாய்…. குழந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குழம்பு பாத்திரத்தில் விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள தாழநல்லூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும், கிரிஷ் என்ற மகனும் மற்றும் கிருபாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்‌. இந்நிலையில் மனைவியிடம் மணிகண்டன் மதிய உணவு சமைக்குமாறு கூறி விட்டு வயலுக்கு சென்றுள்ளார். இதில் சமையலை முடித்துவிட்டு சாம்பாரை பெரிய பாத்திரத்தில் ஊற்றி சமையலறையில் தனலட்சுமி வைத்திருந்திருக்கிறார்.

அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கிருபாஸ்ரீ சூடாக இருந்த சாம்பார் பாத்திரத்தில் எதிர்பாராவிதமாக தவறி விழுந்துள்ளார். இதில் குழந்தையின் உடல் வெந்து அவரின் அலறல் சதத்தை கேட்டு தாய் தனலட்சுமி ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை கிருபாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |