கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 3 1/2 வயது குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் தாயின் கள்ளக்காதலனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கணவரை பிரிந்து தனது 3 1/2 வயது மகளுடன் வசித்து வந்தவர் நந்தினி. இந்த நிலையில் கள்ளக்காதலனுடன் மதுபோதையில் இருந்த நந்தினி தன் மகளுக்கு மது கொடுத்ததோடு, பலமாக மகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ரத்த வாந்தி எடுத்ததால் குழந்தையைக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர்.
இதுதொடர்பாக கள்ளகாதலனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.